ADDED : மார் 19, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
கோவை: சித்தாபுதுார் அய்யப்பன் கோயில், 57வது ஆண்டு திருவிழா முடியும் வரை தினமும் பக்தர்கள் நிறைபறை சமர்ப்பிக்கலாம், என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கொடியேற்றப்பட்ட செவ்வாயன்று இரவு 11 மணி வரை தேங்காய், மலர், நெல், அரிசி, மஞ்சள், அவல், நாணயம் உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாக ஏராளமான பக்தர்கள் சமர்ப்பித்தனர். பலரது கோரிக்கையை ஏற்று, திருவிழா முடியும் வரை தினமும் இரவு 7:00 மணி முதல் நடை சாத்தும் வரை நிறைபறை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
