/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கியில் பெற்ற வீட்டுக்கடனை கூட்டுறவு வங்கிக்கு மாற்றலாம்
/
வங்கியில் பெற்ற வீட்டுக்கடனை கூட்டுறவு வங்கிக்கு மாற்றலாம்
வங்கியில் பெற்ற வீட்டுக்கடனை கூட்டுறவு வங்கிக்கு மாற்றலாம்
வங்கியில் பெற்ற வீட்டுக்கடனை கூட்டுறவு வங்கிக்கு மாற்றலாம்
ADDED : ஜூன் 15, 2025 10:23 PM
கோவை; பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் வாங்கிய வீட்டுக் கடனை, கூட்டுறவு வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி துவங்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீடு கட்டுவதற்கென, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தகுதிக்கேற்ப கடன் வழங்குகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு பின், நம்முடைய தேவைக்காக, ஒரு வங்கியில் இருந்து வீட்டுக்கடன் வாங்கிய பின், வட்டி விகிதம் அல்லது சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்ற பல காரணங்களுக்காக, குறிப்பிட்ட வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனை, மற்றொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.
தற்போது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் வாங்கிய வீட்டுக்கடனை, கூட்டுறவு வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநில தலைமை கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் வேளாண் கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கல்விக் கடன் என பல்வேறு வகைகளில் கடன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வீட்டுக்கடனும் வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம், ரூ.75 லட்சம் வரையும், அடமானக் கடனுக்கு, அதிகபட்சம் ரூ.1 கோடி ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது.
'டாப் -அப்' எனப்படும், கூடுதலாக கடன் வாங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு, வீட்டுக்கடன் மாற்றப்படும் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும். இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளை அணுகலாம்.