/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவில் கிரீம் தடவி காலையில் வெள்ளையாகி விட முடியாது! நைட் கிரீம்களில் 'ஸ்டீராய்டு' அபாயம் !
/
இரவில் கிரீம் தடவி காலையில் வெள்ளையாகி விட முடியாது! நைட் கிரீம்களில் 'ஸ்டீராய்டு' அபாயம் !
இரவில் கிரீம் தடவி காலையில் வெள்ளையாகி விட முடியாது! நைட் கிரீம்களில் 'ஸ்டீராய்டு' அபாயம் !
இரவில் கிரீம் தடவி காலையில் வெள்ளையாகி விட முடியாது! நைட் கிரீம்களில் 'ஸ்டீராய்டு' அபாயம் !
ADDED : பிப் 10, 2024 09:06 PM

இரவில் பயன்படுத்தும் 'நைட் கிரீம்' பல சந்தைகளில் மிகவும் பிரபலம்... இதை கண்மூடித்தனமாக அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஏதேனும் பாதிப்புகள் வருமா என்பது குறித்தும் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.
டெர்மடாலஜிஸ்ட் ஜனனி ஆதித்யனை சந்தித்து பேசினோம்...!
நைட் கிரீம் பல சந்தைகளில் கிடைக்கிறது. முந்தைய காலங்களில் சரும பராமரிப்பு என்பது பெரிதளவில் இல்லை. தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம், காலநிலை அனைத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றம், பல்வேறு சரும பிரச்னைகளை உண்டாக்குகின்றன.
ஆகவே, சரும பராமரிப்புக்கு கட்டாயம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாய்ச்சுரைசர், சன் ஸ்கிரீன் கட்டாயம் தினந்தோறும் பயன்படுத்த வேண்டும்.
கிரீம்களை பொறுத்தவரையில், உணவுக்கு இருப்பது போல் தரச்சான்று, விதிமுறைகள் இல்லை. மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இன்ஸ்டன்ட் கிரீம் என சந்தைகளில் கிடைக்கும் பலவற்றில், ஸ்டீராய்டு, ஹைட்ரோகிளோனால் அதிகம் சேர்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால், பக்கவிளைவுகள் ஏற்படும்.
எந்த ஒரு கிரீமும் மூன்று, ஐந்து நாட்களில் ரிசல்ட் கொடுக்காது என்ற எதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் தேவை.
பல இளம் பெண்கள் இதில் சிக்கி, தோல் பாதிப்புடன் மருத்துவமனை வருகின்றனர். இன்ஸ்டன்ட் ரிசல்ட் கொடுக்கும் கிரீம்களை தவிர்க்க வேண்டும்.
ஸ்டீராய்டு, ஹைட்ரோகிளோனால் ஆகிய இரண்டும் இல்லாமல் ரெட்டினால், ஹைலரானிக் ஆசிட் இருக்கும் நைட் கிரீம் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
குழந்தைக்கு முயற்சிப்பவர்கள், ரெட்டினால் பயன்படுத்தக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் உணவு பொருட்களை போன்று, காஸ்மெடிக் பொருட்களுக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.