/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இலக்கியம் படிப்பதை நிறுத்தவே கூடாது'
/
'இலக்கியம் படிப்பதை நிறுத்தவே கூடாது'
ADDED : செப் 17, 2025 10:25 PM

கோவை; வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், கோவையில் நுால் வெளியீட்டு நடந்தது. கவிஞர் சண்முகம் தலைமை வகித்தார். எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய இரண்டு சிறுகதை நுால்கள் வெளியிடப்பட்டன. நுால்களை ஆறுமுகம் வெளியிட, பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
முகில் தினகரன் பேசுகையில், ''30 ஆண்டுகளாக கவிதைகள், கதைகள் எழுதி வருகிறேன். இதுவரை, 157 நாவல்கள் எழுதியுள்ளேன். சில ஆண்டுகளில், 200 நாவல்களை கடந்து விடுவேன்.
படைப்பாளர்களை பொறுத்தவரை இலக்கியத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியாது. ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் படித்து முடிக்க முடியாத அளவுக்கு, இலக்கிய பொக்கிஷங்கள் தமிழில் உள்ளன. இலக்கியம் படிப்பதையும், எழுதுவதையும் இளைஞர்கள் நிறுத்தக்கூடாது,'' என்றார்.
கவிஞர்கள் சுந்தரராமன், பிரசாத், சிவஞானம், அன்பு சிவா, நறுமுகை, மாரப்பன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.