/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்க போனுக்கு உங்க சார்ஜரைதான் போடணும் ரொம்ப நாள் உழைக்க இதுல உஷார்!
/
உங்க போனுக்கு உங்க சார்ஜரைதான் போடணும் ரொம்ப நாள் உழைக்க இதுல உஷார்!
உங்க போனுக்கு உங்க சார்ஜரைதான் போடணும் ரொம்ப நாள் உழைக்க இதுல உஷார்!
உங்க போனுக்கு உங்க சார்ஜரைதான் போடணும் ரொம்ப நாள் உழைக்க இதுல உஷார்!
ADDED : ஏப் 26, 2025 11:07 PM

இரவில் துாங்கும் போது, இதற்கு 'குட்நைட்' சொல்லி, காலையில் இதன் முகத்தில் 'ஹாய்' சொல்வது வழக்கமாகி விட்டது.
ஸ்மார்ட்போன் இல்லாத கரங்களை காண்பது இன்று அரிது. ஆனால், அதை முறையாக பயன்படுத்துகிறோமா...! நீண்டநாள் உழைக்க என்ன வழி.
சொல்கிறார், மொபைல் சர்வீஸ் டெக்னீசியன் முகமது ராஜா.
பல்வேறு சாதனங்களுக்கு ஒரே சார்ஜிங் கேபிள் மற்றும் அடாப்டரை பயன்படுத்துவது வசதியாக இருக்கலாம். ஆனால், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு மொபைலுக்கும் தனிப்பட்ட பவர் அவுட்புட் தேவைப்படுகிறது.
உதாரணமாக, 4,000 மில்லி ஆம்பியர் பேட்டரி கொண்ட மொபைல் போனுக்கு, 5000 மில்லி ஆம்பியர் அளவிலான சார்ஜர் பயன்படுத்தினால், பேட்டரியில் உள்ள லித்தியம் கசிவாகி, மொபைல் போன் பாதிக்க வாய்ப்புள்ளது.
மாறாக, அதிக மில்லி ஆம்பியர் தேவைப்படும் மொபைல் போனுக்கு, குறைந்த ஆம்பியர் சார்ஜர் பயன்படுத்தினால் மெதுவாக சார்ஜாகும்.
தரமற்ற சார்ஜர்கள் பயன்படுத்துவதால், பேட்டரியின் ஆயுள் குறைவதுடன், மொபைலின் சர்க்யூட், மெயின் போர்டு மற்றும் சார்ஜிங் போர்டும் சேதமடையும் அபாயம் அதிகம்.
இதை தவிர்க்க, ஒவ்வொரு மொபைல் போன் நிறுவனங்களும், தங்களது சாதனங்களுக்கு தனி சார்ஜர்களை வடிவமைக்கின்றன. அந்த சார்ஜர்களின் விலை சற்றே உயர்ந்ததாக இருந்தாலும், அவை மொபைல் போன் பாதுகாப்பு மற்றும் நீடித்த பயன்பாட்டை உறுதி செய்கின்றன.
இவ்வாறு, அவர்கூறினார்.

