/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிக்கோளை நிர்ணயித்து பயணிக்க வேண்டும்
/
குறிக்கோளை நிர்ணயித்து பயணிக்க வேண்டும்
ADDED : மார் 27, 2025 11:56 PM

கோவை: நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின், 38வது ஆண்டு விழா, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமையில் நடந்தது.
விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கோவை மதுக்கரை 35 பீல்டு ரெஜிமென்ட் கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஸ்ரீதர் ராஜன் கலந்து கொண்டு, 'எஸ்.ஆர்.சி.ஏ.எஸ். பல்ஸ்' எனும் கல்லுாரி மலரை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், '' நாம் சரியான குறிக்கோளைத் தேர்வு செய்து, அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். வாழ்க்கையை நேசித்து வாழ வேண்டும். எதுவும் எளிதாக கிடைக்காது. தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்,” என்றார்.
தொடர்ந்து கல்வி, விளையாட்டு, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய, 104 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த மாணவர்களாக, இளநிலை பிரிவில் பி.எஸ்.சி.,சி.எஸ்.டி.ஏ., மாணவர் பரத்கண்ணா, முதுநிலை பிரிவில் மேலாண்மைத்துறை மாணவர் ரோகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர். கல்லுாரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், துணை முதல்வர் பூங்குழலி, பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

