/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
102 முறை வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞர்
/
102 முறை வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞர்
ADDED : மே 28, 2025 01:39 AM

தொண்டாமுத்தூர் : கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் ஹரிகுமார், 39; உடற்பயிற்சி பயிற்சியாளர். பட்டதாரியான இவர், உடற்பயிற்சிகள் வாயிலாக, பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இளைஞர்கள் போதை பழக்கங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருவதை தடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டார். இதற்காக, கடந்த 4 மாதங்களில், 5.5 கி.மீ., தொலைவுள்ள வெள்ளியங்கிரி மலையை, 102 முறை ஏறியுள்ளார்.
ஹரிகுமார் கூறுகையில், சமீபகாலமாக இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். போதைப் பழக்கத்தை விட்டு, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலத்தை பேணி காத்தால், வாழ்நாள் அதிகரிக்கும் என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், வெள்ளியங்கிரி மலை ஏற துவங்கினேன்.
கடந்த, 4 மாதங்களில், 102 முறை வெள்ளியங்கிரி மலை ஏறி உள்ளேன். இதன் மூலம் உடல் நலத்தின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும். 4 மாதங்களில், 102 முறை மலையேறியதை, கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளேன்,'' என்றார்.