/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவியுடன் பேசிய வாலிபருக்கு உதை
/
மனைவியுடன் பேசிய வாலிபருக்கு உதை
ADDED : ஆக 29, 2025 10:27 PM
கோவை; துடியலுார் அருகே உள்ள ராக்கியாபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்,38. சரவணம்பட்டி கரட்டுமேட்டில் உள்ள இன்ஜினியரிங் கம்பெனியில் வேலை செய்தார். அதே கம்பெனியில், சிவானந்தாபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார், 32, வெல்டராக பணியாற்றினார்.
வேலை செய்யும்போது, கார்த்திக் மொபைல் போனை வாங்கி, வினோத்குமார் தனது மனைவியிடம் பேசி வந்தார். அதன்பின், வினோத்குமார்மனைவி, கார்த்திக்கிடம் அடிக்கடி மொபைல் போன் வீடியோ அழைப்பில் பேசி வந்திருக்கிறார்.
இந்த விஷயம் வினோத்குமாருக்கு தெரியவந்ததால், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னையில், கம்பெனி உரிமையாளர்,கார்த்திக்கை வேலையை விட்டு நீக்கினார்.
28ம் தேதி, தனது மனைவியுடன் கார்த்திக் பேசிக்கொண்டிருந்ததை, வினோத்குமார் பார்த்து விட்டார். ஆத்திரத்தில் கார்த்திக் கை தாக்கி காயப்படுத்தினார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, வினோத்குமாரை கைது செய்தனர்.