/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானை தாக்கி இளம்பெண் உயிரிழப்பு
/
காட்டு யானை தாக்கி இளம்பெண் உயிரிழப்பு
ADDED : ஜூலை 17, 2025 10:34 PM
தொண்டாமுத்தூர்; சவுக்காட்டுபதி ஆற்றில், துணி துவைக்கும்போது, காட்டு யானை தாக்கியதில், இளம்பெண் உயிரிழந்தார்.
நரசீபுரம், சவுக்காட்டுபதியை சேர்ந்தவர் ஜூவா, கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி செல்வி,23 என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். செல்வி நேற்று, தோட்டத்து வேலைக்கு சென்றுவிட்டு, பகல் 2:00 மணிக்கு, வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில்,நேற்று மாலை, 3:00 மணிக்கு,செல்வி தனது அக்காள் மகளான நந்தினியுடன், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆற்றில், துணி துவைக்க சென்றுள்ளார். நந்தினி, கரையில் அமர்ந்து கொண்டிருந்தார். செல்வி, ஆற்றில் இறங்கி துணி துவைத்துக்கொண்டிருக்கும்போது, அப்போது, ஒற்றைக்காட்டு யானை வந்தது.
இதனைக்கண்ட செல்வி ஓடி புதருக்குள் சென்றுள்ளார். பின்னால் துரத்தி சென்ற ஒற்றைக்காட்டு யானை தாக்கியதில், செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் ஆலாந்துறை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.