/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் உழைப்பு; போலி நபர்களுக்கு பிழைப்பு ஆசையை தூண்டி 'அபேஸ்!' சைபர் கிரைம் போலீசாரின் கவன எச்சரிக்கை
/
உங்கள் உழைப்பு; போலி நபர்களுக்கு பிழைப்பு ஆசையை தூண்டி 'அபேஸ்!' சைபர் கிரைம் போலீசாரின் கவன எச்சரிக்கை
உங்கள் உழைப்பு; போலி நபர்களுக்கு பிழைப்பு ஆசையை தூண்டி 'அபேஸ்!' சைபர் கிரைம் போலீசாரின் கவன எச்சரிக்கை
உங்கள் உழைப்பு; போலி நபர்களுக்கு பிழைப்பு ஆசையை தூண்டி 'அபேஸ்!' சைபர் கிரைம் போலீசாரின் கவன எச்சரிக்கை
ADDED : பிப் 22, 2024 11:39 PM
பெ.நா.பாளையம்:'ஆன்லைன்' வாயிலாக ஏற்படும் பணம் இழப்பை தடுக்க, சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.சமூக வலைதளங்கள் வாயிலாக, பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து, பணம் திருடும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
விதவிதமாக பொதுமக்களுக்கு ஆசை காட்டி, அதன் வாயிலாக திருடி வருகின்றனர். இதுதொடர்பாக, சைபர் கிரைம் போலீசார், தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
'ஆன்லைன்' திருடர்கள், பொதுமக்களின் வங்கி கணக்குகள் மற்றும் சில நவீன முறைகள் வாயிலாக எவ்வாறு மோசடி செய்து பணம் பறிக்கின்றனர் என்பதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் அறிவிப்புகள்வெளியிட்டு உள்ளனர்.
* வங்கி கணக்குகளை விற்பதோ, வாடகைக்கு விடுவதோ தண்டனைக்குரியது. வங்கி பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு, பாஸ்புக் நெட் பேங்கிங் யூசர் விபரங்கள் மற்றும் காசோலை புத்தகத்தை எவருக்கும் தரக்கூடாது.
* முன்பின் தெரியாத நபர்களின் அறிவுறுத்தலின் பெயரில், ஆன்லைன் டிரேடிங் செய்ய 'லிங்க்'குளின் வாயிலாக பணம் எதுவும் செலுத்த வேண்டாம். சமூக வலைதள கணக்குகளை 'பிரைவேட் அக்கவுண்ட்' ஆக பயன்படுத்தவும்.
* தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை தவிர்க்க வேண்டும். திருமண வெப்சைட்டுகள் வாயிலாக, வரன்களை தேர்வு செய்யும் போது, கவனம் தேவை. மோசடியான கணக்குகள் வாயிலாக பணம் இழப்பு ஏற்படும் அபாயம் உண்டு.
* வாடிக்கையாளர் சேவை எண்களை, அந்தந்த இணையதளம் மற்றும் செயலிகளின் வாயிலாக பெற்றுக் கொள்ள வேண்டும். தேடுபொறிகளில் வாயிலாக தவறான வாடிக்கையாளர் சேவை எண்களை தொடர்பு கொள்வதால், பண இழக்கும் அபாயம் உண்டு.
* முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லோன் செயலிகளில் கடன் பெற வேண்டாம். மோசடிக்காரர்கள் தங்கள் புகைப்படங்களை மார்ப்பிங் செய்து, அச்சுறுத்த வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ தனது வாடிக்கையாளரிடம் ஓ.டி.பி., எண் மற்றும் இதர விவரங்களை கேட்பதில்லை.
* வெளிநாடுகளில் வேலை பெற, முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். எந்த ஒரு வேலை வாய்ப்பு நிறுவனமும், வேலை கொடுக்க முன் பணம் கேட்பதில்லை. தங்களது நிலத்தில், மொபைல் போன் டவர் அமைப்பதாக வரும் போலியான அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்.
* முகம் தெரியாத நபர்களின் அறிவுறுத்தலின் பேரில், குயிக் சப்போர்ட், எனி டெஸ்க் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
* தங்களது உறவினர், தெரிந்த நண்பர்கள் போல் போலியான சமூக வலைதள கணக்குகளில் இருந்து அவசர கடன் உதவி கோரப்படலாம். கவனம் தேவை. இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக வரும் போலியான அழைப்புகளை நம்பி பணம் செலுத்த வேண்டாம்.
பணத்தை இழந்தவர்கள் பதட்டப்படாமல், சைபர் கிரைம் வாயிலாக உடனடியாக, 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.