/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டம்; பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டம்; பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டம்; பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டம்; பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : ஜூன் 05, 2025 01:24 AM
கோவை; மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்துவருகின்றன. அந்த வகையில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்கீழ் தெற்கு மண்டலம், 100வது வார்டுக்கு உட்பட்ட பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி, முத்து நகர் உள்ளிட்ட இடங்களில் ரோடு சீரமைக்கும் பணி நடந்துவருகிறது.
போத்தனுார் மேட்டூர் ரோடு, மேட்டூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கிறது.
வெள்ளலுார் உரக்கிடங்கு வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பணிகளை தரமாக முடிக்க உத்தரவிட்டார். மேலும், ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் குறிச்சி-குனியமுத்துார் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கென, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, பாலக்காடு ரயில்வே பாதைக்கு மேலேயும், பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு கீழ் பகுதியிலும் பாலம் அமைக்கப்பட்டு, அதன்மீது குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இதர பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டார்.