/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரொம்பதான் உனக்கு 'லொள்ளு'; நாய்க்கு விழுந்தது வேல் குத்து
/
ரொம்பதான் உனக்கு 'லொள்ளு'; நாய்க்கு விழுந்தது வேல் குத்து
ரொம்பதான் உனக்கு 'லொள்ளு'; நாய்க்கு விழுந்தது வேல் குத்து
ரொம்பதான் உனக்கு 'லொள்ளு'; நாய்க்கு விழுந்தது வேல் குத்து
ADDED : பிப் 05, 2025 12:49 AM
கோவை; சிவானந்தா காலனி பகுதியில், தங்களை பார்த்து குரைத்த நாயை, வேலால் குத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவானந்தா காலனி, காந்தி நகரை சேர்ந்தவர் கனகவள்ளி, 34. இவர் கடந்த எட்டு மாதங்களாக, நாய் வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில், நாயை வீட்டு வாசலில் கட்டிப்போடுவது வழக்கம்.
கனகவள்ளி வீட்டின் அருகில், வாலிபர்கள் சிலர் மது போதையில், கட்டி வைத்திருந்த நாயை அடித்து தொந்தரவு செய்துள்ளனர்.இதனால் அந்த நாய்,வாலிபர்களை பார்க்கும் போதெல்லாம்குரைத்துள்ளது. ஆத்திரம் அடைந்த அவர்கள், நாயை கொன்று விடுவோம் எனவும் கூறி, வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த 1ம் தேதி இரவு மது போதையில், வாலிபர்கள் கனகவள்ளி வீட்டின் அருகில் சென்ற போது, வெளியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் குரைத்ததால், அந்த வாலிபர்கள் நாயை பிடித்து, வேலால் குத்தி விட்டு, தப்பி ஓடினர்.
கனகவள்ளி ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.