/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
/
சிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
ADDED : டிச 03, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜீவ், 24. இவரும், செல்வபுரத்தை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவியும் மூன்றாண்டுகளாக பழகி வந்தனர். கடந்த மாதம் இருவரும் தனியாக இருந்தபோது, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்புகைப்படத்தை சிறுமி, ராஜீவ் போனுக்கு அனுப்பி வைத்தார்.
சில நாட்களுக்கு பின் ராஜீவ், அப்புகைப்படத்தை வைத்து, பணம் கேட்டு மிரட்ட துவங்கினார். சிறுமி தனது தந்தையிடம் கூறினார். நேற்று முன்தினம், கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தந்தை புகார் செய்தார். விசாரித்த போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, ராஜீவை கைது செய்தனர்.

