/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவிக்கு பாலியல் சீண்டல்; 'போக்சோ'வில் வாலிபர் கைது
/
மாணவிக்கு பாலியல் சீண்டல்; 'போக்சோ'வில் வாலிபர் கைது
மாணவிக்கு பாலியல் சீண்டல்; 'போக்சோ'வில் வாலிபர் கைது
மாணவிக்கு பாலியல் சீண்டல்; 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : ஜன 22, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்; கோவையில், பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கோவையை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இம்மாணவி அளித்துள்ள புகாரில், உறவினரான சக்திகுமார்,19 என்பவர், தன்னை காதலிப்பதாக கூறி, கடந்த 2 ஆண்டுகளாக பல முறை கட்டாயப்படுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
பேரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சக்திகுமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.