/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவியிடம் பாலியல் சீண்டல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
/
மாணவியிடம் பாலியல் சீண்டல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
மாணவியிடம் பாலியல் சீண்டல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
மாணவியிடம் பாலியல் சீண்டல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : மே 24, 2025 05:51 AM
கோவை, :கோவையை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவரின், தாய் --- தந்தை விவாகரத்து பெற்றதால் சிறுமி, தனது பாட்டியுடன் வசிக்கிறார். அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு செல்கிறார்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி, மாணவியின் பாட்டி கடைக்கு சென்ற போது, வீட்டில் மாணவி மட்டும் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நவ்சாத் என்ற சேனாதிபதி, 26, தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
உடனடியாக, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த மாணவி, இதுகுறித்து பாட்டியிடம் கூறியுள்ளார். மாணவியின் பாட்டி அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நவ்சாத்தை கைது செய்தனர்.