/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் கண்ணாடியை உடைத்து இளைஞர்கள் மீது தாக்குதல்
/
கார் கண்ணாடியை உடைத்து இளைஞர்கள் மீது தாக்குதல்
ADDED : ஏப் 02, 2025 07:08 AM

கோவை; ரேஸ்கோர்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த, கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த இளைஞர்களை தாக்கியவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருபவர் சுதாகர், 19; இவரது நண்பர் ஜெரோம், 25. இருவரும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில், வாடகைக்கு கார் எடுத்து 'ஆக்டிங் டிரைவர்' பணி செய்து வந்தனர்.
இந்நிலையில், கொடைக்கானல் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு, செல்வபுரம் பகுதியில் இருந்து வாடகைக்கு கார் எடுத்துக்கொண்டு, உக்கடம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர், சுதாகர், ஜெரோம் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு, சுங்கம் பைபாஸ் சாலையில் சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தங்களின் நண்பர்களை அழைத்துக்கொண்டு, காரை பின்தொடர்ந்து சென்றனர்.
கார் வாலாங்குளம் அருகில் சென்ற போது, காரை வழிமறித்தனர். காரின் பின்புற கண்ணாடியில் கல்லை எறிந்து உடைத்து ஜெரோம், சுதாகர் ஆகியோரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவம் குறித்து ஜெரோம், சுதாகர் ஆகியோர் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

