/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று பவுன் நகையுடன் தப்பிய வாலிபருக்கு வலை
/
மூன்று பவுன் நகையுடன் தப்பிய வாலிபருக்கு வலை
ADDED : ஜன 20, 2025 06:45 AM
கோவை : நகை வாங்குவது போல் நடித்து, மூன்று பவுன் நகையை திருடி தப்பிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 57; சத்தி ரோட்டில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, வாலிபர் ஒருவர் கடைக்கு வந்தார். கடையில் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான, மூன்று பவுன் தங்க நகையை தேர்வு செய்த வாலிபர், அதற்கான தொகைக்கு, வங்கி 'டெபிட் கார்டை' கொடுத்தார்.
அதற்கு பாலகிருஷ்ணன், டெபிட் கார்டு வாங்குவதில்லை; பணமாக தர அறிவுறுத்தினார்.
வாலிபர் பணத்தை எடுத்து வருவதாகக் கூறி, கதவை திறந்து நகையுடன் வேகமாக அங்கிருந்து தப்பினார். பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்படி, காட்டூர் போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.