/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நண்பரை கொலை செய்து வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
/
நண்பரை கொலை செய்து வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஏப் 09, 2025 02:50 AM

பெ.நா.பாளையம்:நண்பரின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், கோழிக்கோடை சேர்ந்த நண்பர்கள் ஜெயராஜ், 41, மகேஷ், 38. இருவரும் கோவை, துடியலுாரில் வீடு எடுத்து தங்கி, ரயில்வே ஸ்டேஷன் சாலையில் பேக்கரி நடத்தினர்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும், இருவரும் பேக்கரிக்கு வராததால், கடை ஊழியர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். துடியலுார் போலீசார் கதவை உடைத்து சென்று பார்த்தனர்.
அப்போது, மகேஷ் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். ஜெயராஜ் துாக்கில் பிணமாக தொங்கினார். இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றினர். மார்ச் 6ல் மகேஷ், விவாகரத்து ஆன ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதில், உடன்பாடு இல்லாததால், ஜெயராஜ், மகேஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மகேஷை கொன்று விட்டு, ஜெயராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

