/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
/
லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
ADDED : ஜன 03, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; திருச்சி சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சென்னையை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.
கடந்த 31ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற நபர் ஒருவர் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் உயிரிழந்தவர் சென்னை, கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராஜேஷ், 35 என்பது தெரியவந்தது.

