ADDED : ஆக 28, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜிவ், 36.
குன்னாச்சி பகுதியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அதே ஹோட்டலில் பணிபுரியும் திருச்சியை சேர்ந்த அனந்தன், 28, என்பவருடன் வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது, பாறை சந்திப்பு அருகே பைக் கட்டுப்பாட்டு இழந்து கவிழ்ந்தது. இதில் தலையில் அடிபட்டு ராஜிவ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அனந்தனை, அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.