ராமகிருஷ்ணா கல்லூரியில் இளைஞர் பார்லி. நிகழ்ச்சி
ராமகிருஷ்ணா கல்லூரியில் இளைஞர் பார்லி. நிகழ்ச்சி
ADDED : மார் 06, 2026 05:13 AM

கோவை: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சென்னை மண்டல என்.எஸ்.எஸ்., மை பாரத், பாரதியார் பல்கலை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இணைந்து, 'வளர்ந்த இந்தியா இளைஞர் பார்லி.,' நிகழ்ச்சி ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடந்தது.
பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதில், கோவை மாவட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று, '50 ஆண்டுகள் அவசர நிலை: இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த பாடங்கள்' என்ற பொருளில் உரையாற்றினர்.
சிறப்பாக பங்களித்த, பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லூரி மாணவி சங்கமி, அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் அஜய் பிரசாத், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் அக் ஷய லஷ்மி, மோகிதா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவி பிரனிகா ஆகியோர், மாநில போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் தலைமை வகித்தார். மத்திய அரசு வழக்கறிஞர் குமரன், கோவை அரசு கலைக் கல்லூரி, அரசியல் அறிவியல் துறைத் தலைவர் கனகராஜ், முன்னாள் வனக் கால்நடை அலுவலர் மனோகரன், கோவை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் மதிவாணன், ஒளிரும் கோவை சி.இ.ஓ., இளஞ்செழியன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். கல்லூரி முதல்வர் சிவக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
