sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாக்காளராக தங்கள் பெயர் இடம்பெற இளைஞர்கள் ஆர்வம்! சிறப்பு முகாமில் விண்ணப்பங்கள் அளித்தனர்

/

வாக்காளராக தங்கள் பெயர் இடம்பெற இளைஞர்கள் ஆர்வம்! சிறப்பு முகாமில் விண்ணப்பங்கள் அளித்தனர்

வாக்காளராக தங்கள் பெயர் இடம்பெற இளைஞர்கள் ஆர்வம்! சிறப்பு முகாமில் விண்ணப்பங்கள் அளித்தனர்

வாக்காளராக தங்கள் பெயர் இடம்பெற இளைஞர்கள் ஆர்வம்! சிறப்பு முகாமில் விண்ணப்பங்கள் அளித்தனர்


ADDED : நவ 18, 2024 06:22 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;

கோவையிலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில் இரண்டு நாட்களாக நடந்த வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற, இளைஞர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், 18 வயதுடைய இளைஞர்கள் ஒவ்வொருவரின் ஓட்டுக்களும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால் மாவட்ட தேர்தல் பிரிவு ஒட்டுப்பதிவு எண்ணிக்கையின் சதவீதத்தை அதிகரிக்கவும், 18 வயதை தொடும் இளைஞர்கள் ஒருவர் கூட விடுபடாமல் அனைவருக்கும் ஓட்டுரிமை கிடைக்க செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பணிகளை துவக்கினர்.

கோவையிலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வாக்காளர்களுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி கோவையில் 15,43,073 ஆண்கள், 16,05,516 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள், 650 பேர் என மொத்தம் 31,49,239 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை நகரில், 2,201 ஓட்டுச்சாவடிகளும், கிராமப் பகுதிகளில், 916 ஓட்டுச்சாவடிகள் என மொத்தம் 3,117 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் 3,117 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தலைமையில் 1,019 ஓட்டுச்சாவடி உதவி அலுவலர்கள் சிறப்பு முகாம் பணிகளை மேற்கொண்டனர்.

முகாமில், 18 வயதுடையவர்கள், அயல்நாடு வாழ் இந்தியர் பெயர்கள் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகளை குறியீடு செய்தல், நகல் அடையாள அட்டை பெறுதல் மற்றும் ஏற்கனவே உள்ள தரவுகளில் திருத்தங்களும், வாக்காளர்களின் பெயர், வயது உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்யவும் விண்ணப்பங்களை சமர்பித்தனர்.

2025 -ஆம் ஆண்டு ஜன.,1 தேதியில் 18 வயதினைப் பூர்த்தி செய்பவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை புதியதாக இணைத்துக்கொள்ள ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்யவும், மற்றும் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டுபவர்கள் தகுந்த படிவங்களின் மூலமாகவும், voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பித்திருந்தனர்.

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க படிவம்- 6ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் -7ம், திருத்தம் செய்யவும், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் புதிய குடியிருப்பு முகவரி மாற்றம் செய்ய படிவம் -8 யும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க படிவம்- 6 பி யையும், பயன்படுத்தினர்.

தொண்டாமுத்துார், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தெற்கு தொகுதிகளில் படிவம் 6 படிவம் பற்றாக்குறையாக இருந்தது. அவற்றை உடனுக்குடன் தேர்தல் பிரிவு பணியாளர்கள் கொண்டு போய் சேர்த்தனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

இம்முகாம் தொடர்ந்து நவ., 23, 24 ஆகிய இரு தினங்களில் நடைபெறும். மேலும், நவ., 28. வரை அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

கடந்த இரண்டு நாட்களாக நடந்த முகாமில் ஓட்டுச்சாவடி வாயிலாக 62,383 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். ஆன்லைன் வாயிலாக 37,617 பேர் விண்ணப்பித்தனர். சுமார் ஒரு லட்சம் பேர் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முகாமில் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் இளைஞர்களே அதிகம் பேர். வரும் தேர்தலில் இளைஞர்கள் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் அதற்காகவே விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதாக கூறினர். மேலும் ஏராளமான அரசியல் கட்சியினரும் புதிய வாக்காளர்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us