/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கில் சிக்கிய வாலிபர் மீண்டும் கைது
/
போக்சோ வழக்கில் சிக்கிய வாலிபர் மீண்டும் கைது
ADDED : டிச 13, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: துாத்துக்குடி, மில்லர் புரம், ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருபவர் ஹரிஹரன்,22. பள்ளியில் படித்த போது, சக மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார்.
அந்த மாணவி கோவையிலுள்ள கல்லுாரி ஒன்றில் படித்து வருகிறார். இதனால், கோவைக்கு வந்த ஹரிஹரன், குடிபோதையில் அந்த மாணவியிடம் மீண்டும் தகராறு செய்தார். புகாரின் பேரில், சாய்பாபாகாலனி போலீசார் விசாரித்து, ஹரிஹரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

