/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபருக்கு சிறை
/
புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபருக்கு சிறை
ADDED : மார் 18, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் உள்ள, ஒரு வீட்டில் சிலர் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விற்பனைக்காக புகையிலைப்பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த, 96 கிலோ புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். புகையிலைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட, கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோட்டை சேர்ந்த ரஷீத், 37 என்பவரை சிறையில் அடைத்தனர். தலைமறைவான முலாராம் என்பவரை தேடி வருகின்றனர்.