/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்பூசணி வாங்க வந்த இளைஞரை கடத்தி ரூ.1.1 லட்சம் பறிப்பு; கும்பலுக்கு வலை
/
தர்பூசணி வாங்க வந்த இளைஞரை கடத்தி ரூ.1.1 லட்சம் பறிப்பு; கும்பலுக்கு வலை
தர்பூசணி வாங்க வந்த இளைஞரை கடத்தி ரூ.1.1 லட்சம் பறிப்பு; கும்பலுக்கு வலை
தர்பூசணி வாங்க வந்த இளைஞரை கடத்தி ரூ.1.1 லட்சம் பறிப்பு; கும்பலுக்கு வலை
ADDED : ஏப் 02, 2025 06:58 AM
போத்தனூர்; கோவை, பைக்கில் சென்ற இளைஞரை காரில் கடத்தி, ரூ.1.1 லட்சம் ரொக்கத்தை பறித்து தப்பிய கும்பலை, போலீசார் தேடுகின்றனர்.
மதுக்கரையை அடுத்து க.க.சாவடியிலிருந்து வேலந்தாவளம் செல்லும் சாலையில், நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் பைக்கில் வேலந்தாவளம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த கார், பைக்கை வழிமறித்து நின்றது. காரிலிருந்து இறங்கிய கும்பல் பைக்கை தள்ளிவிட்டு, அந்த இளைஞரை காரில் ஏற்றி, க.க.சாவடி நோக்கி சென்றது. இதனை அவ்வழியே சென்றோர் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
க.க.சாவடி போலீசார் அங்கு சென்று, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கார் வாளையார் நோக்கி சென்றது தெரியவந்தது. பைக்கின் பதிவெண் மூலம், வாகன உரிமையாளரான திருச்சூர் மாவட்டம், சேர்த்து பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமுர்த்திக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி மகன் ராகுல், ரூ.1.1 லட்சம் ரொக்கத்துடன் தர்பூசணி வாங்க கோவைக்கு வந்ததும், விலை ஒத்து வராததால் பணத்துடன் திரும்பும்போது, வீரப்பனூர் அருகே இந்த சம்பவம் நடந்ததும், இதில் ராகுலுக்கு சிறு காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தியுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த ராகுலை, போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ரொக்கத்தை பறித்த கும்பல், ராகுலை வாளையார் சோதனை சாவடியை அடுத்து ஓரிடத்தில் இறக்கிவிட்டு தப்பியது தெரிந்தது. தப்பிய கும்பலை போலீசார் தேடுகின்றனர். இச்சம்பவம் நடந்த இடத்தில், ஏற்கனவே இருமுறை தங்கம் விற்று வந்தவர்களிடம் ரொக்கம் பறித்து சென்ற சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

