/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞர் கொலை; மேலும் 2 பேர் கைது
/
இளைஞர் கொலை; மேலும் 2 பேர் கைது
ADDED : பிப் 06, 2025 09:44 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 24. கூலித் தொழிலாளி. அம்மன் புதூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 27.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகநாதன் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த ஜன.,23ஆம் தேதி லோகநாதன் மற்றும் தமிழ்ச்செல்வன் பவானி ஆற்றின் கரையோரம் மது அருந்தியதில் ஏற்பட்ட தகராறில் லோகநாதன், தமிழ்செல்வனை கடுமையாக தாக்கினார். இதில் அவர் காயமடைந்தார்.
இதற்கு பழி வாங்க தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து, கடந்த ஜன., 24 ஆம் தேதி சிறுமுகை புதுக்காடு அருகே வெள்ள மொக்கை பகுதிக்கு மது அருந்தலாம் வா என தமிழ்செல்வன், லோகநாதனை அழைத்தார். அப்போது அங்கு வந்த லோகநாதனை தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினார்கள். இதில் லோகநாதன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து லோகநாதனின் உடலை பரிசலில் எடுத்துச் சென்று, பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் கல்லை கட்டி வீசியது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக தமிழ்ச்செல்வன், சூர்யா, மோகன்ராஜ் ஆகிய மூவரையும் ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்டதில் சிவா மற்றும் தினேஷ் என்ற இரு இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.-----