/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து
/
முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : ஏப் 30, 2025 12:20 AM
கோவை, ; ராமநாதபுரம், அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம், 19. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார், 23. இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீராம் தனது நண்பரான சுதீஷ் என்பவருடன், புலியகுளம் ஏரிமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜ் குமார் மற்றும் பரணி ஆகியோர், ஸ்ரீ ராமை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றனர். ஸ்ரீ ராம் அங்கிருந்து ஓட முயன்றார். துரத்திச் சென்ற ராஜ் குமார், பரணி ஆகியோர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்ரீராமின் இடுப்பு, தொடை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி தாக்கினர்.
ஸ்ரீராமின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த ராஜ் குமார், பரணி ஆகியோர் அங்கிருந்து தப்பினர். ஸ்ரீராம் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய பரணியை தேடி வருகின்றனர்.

