ADDED : செப் 08, 2024 11:58 PM

சோமனூர்:சோமனூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
சோமனூர் அடுத்த ஆத்துப்பாளையத்தை சேர்ந்த முருகசாமி மகன் கோகுல், 26. பனியன் கம்பெனி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சாமன் மகன் துரைசாமி, 46. கூலி தொழிலாளி.
வேற்று முன் தினம் இரவு அங்குள்ள பெருமாள் கோவில் அருகே துரைசாமி படுத்து தூங்க முயன்றதாகவும், அதற்கு கோகுல் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இருவரும் போதையில் இருந்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த துரைசாமி, கோகுலை கீழே தள்ளிவிட்டு, அருகில் இருந்த கல்லால் தாக்கியுள்ளார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர் வந்து, காயமடைந்த கோகுலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற டி.எஸ்.பி., தங்கராமன், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். துரைசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.