/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'யுகம்' விளையாட்டு போட்டி; கல்லூரி மாணவியர் அபாரம்
/
'யுகம்' விளையாட்டு போட்டி; கல்லூரி மாணவியர் அபாரம்
'யுகம்' விளையாட்டு போட்டி; கல்லூரி மாணவியர் அபாரம்
'யுகம்' விளையாட்டு போட்டி; கல்லூரி மாணவியர் அபாரம்
ADDED : மார் 18, 2024 12:39 AM

கோவை;குமரகுரு கல்வி நிறுவனம் சார்பில் நடந்த விளையாட்டு போட்டிகளில், மாணவியர் சிறப்பாக விளையாடி பரிசுகளை வென்றனர்.
குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், யுகம்-2024 கலாசார விளையாட்டு விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி, மாணவ - மாணவியருக்கு மகாலிங்கம் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக, மாணவியருக்கான வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டி மார்ச் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்தது.
வாலிபால் போட்டியில் எட்டு அணிகள், லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.  இறுதிப்போட்டியில், நிர்மலா மகளிர் கல்லுாரி அணி 3 - 0 என்ற செட் கணக்கில், கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில், குமரகுரு வேளாண் கல்லுாரி அணியை வீழ்த்தியது.
த்ரோபால் போட்டியில், 12 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரி முதலிடம், கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி இரண்டாமிடம், குமரகுரு வேளாண் கல்லுாரி மூன்றாம் பிடித்தது.

