ADDED : ஏப் 16, 2025 10:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம், ; பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூரில் உள்ள யுவா பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சத்யா வரவேற்றார். பள்ளியின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாக அறங்காவலர்கள் ரமேஷ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன் ''மாணவர்கள் தங்களுக்கான லட்சியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை நோக்கி பயணித்து, லட்சியம் நிறைவேறும் வரை கடினமாக போராட வேண்டும்,'' என்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் அறங்காவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.