sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குண்டும் குழியுமாக மாறிய ஜமீன்ஊத்துக்குளி சாலை

/

குண்டும் குழியுமாக மாறிய ஜமீன்ஊத்துக்குளி சாலை

குண்டும் குழியுமாக மாறிய ஜமீன்ஊத்துக்குளி சாலை

குண்டும் குழியுமாக மாறிய ஜமீன்ஊத்துக்குளி சாலை


ADDED : நவ 12, 2024 05:42 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி ; நல்லுார் பிரிவில் இருந்து, ஜமீன்ஊத்துக்குளி இடையிலான சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுவதால், அதனை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே, நல்லுார் பிரிவில் இருந்து, ஜமீன்ஊத்துக்குளி வரையிலான சாலை, 2.5 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலை, சுற்றுப்பகுதி கிராமங்கள் மட்டுமின்றி, பாலக்காடு, பொள்ளாச்சி, திருச்சூர் நகரங்களைச் சென்றடையும் வகையில் முக்கிய வழித்தடமாக உள்ளது.

ஆனால், இந்த சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைக்காக, கிராம மக்கள் இவ்வழியே எளிதில் செல்ல முடியாமல் திணறுகின்றனர்.

கிராமங்களில் இருந்து, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், விவசாயிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

மக்கள் கூறியதாவது:

இவ்வழித்தடத்தில் சில ஆண்டுகளுக்கு முன், தார் சாலை அமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்காததால், தற்போது சாலை முழுவதும் மோசமாக உள்ளது. மழை பெய்தால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.

வாகனங்களில், இரவு நேரங்களில் அவசர தேவைக்கு விரைந்து செல்ல முடிவதில்லை. புதிதாக சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us