/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவில் வருகிறது 'ஜிப் லைன்'
/
செம்மொழி பூங்காவில் வருகிறது 'ஜிப் லைன்'
ADDED : ஜன 04, 2026 05:24 AM

காந்திபுரம்: காந்திபுரத்தில் உருவாக்கியுள்ள செம்மொழி பூங்காவை, டிச. 11ல் இருந்து ஜன. 1 வரை 22 நாட்களில் மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 717 பேர் பார்வையிட்டனர். வார இறுதி நாட்களில் சராசரியாக, 25 ஆயிரம் - 30 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர்.
பெரும்பாலானோர் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவதால், நிறுத்துவதற்கான இட வசதியை கூடுதலாக ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது. சிறை நுழைவாயில் அருகே காலியிடத்தில், ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு செம்மொழி பூங்காவுக்கு வரும் வாகனங்களை நிறுத்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''செம்மொழி பூங்காவுக்குள் அருங்காட்சியகம் அமைக்க வேலைகள் நடந்து வருகின்றன.
''ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டுகள், ஏ.ஆர்./வி.ஆர். ஆய்வகங்கள், 12டி திரையரங்கு உள்ளிட்டவை அமைக்க வாடகை நிர்ணயிக்கப்பட்டு விட்டது. ஜிப் லைன் வசதி ஏற்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஜிப் லைன் அமைக்க மீண்டும் அனுமதி கோரப்படும்,'' என்றார்.

