/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல அளவிலான வாலிபால் போட்டி துவக்கம்
/
மண்டல அளவிலான வாலிபால் போட்டி துவக்கம்
ADDED : ஏப் 18, 2025 11:29 PM

சூலுார்: சூலுார் பி.எம். ஸ்ரீ கேந்திரிய பள்ளியில் மண்டல அளவிலான வாலிபால் போட்டி துவங்கியது.
சூலுார் பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில், 54 வது சென்னை மண்டல அளவிலான வாலிபால் போட்டி துவங்கியது. சூலுார் விமானப்படைத் தளத்தின் 43 விங் முதன்மை நிர்வாக அதிகாரி குரூப் கேப்டன் பிரசாந்த் போட்டிகளை துவக்கி வைத்தார். 20 க்கும் மேற்பட்ட கே.வி., பள்ளிகளை சேர்ந்த, 14 மற்றும், 17 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள், 250 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி முதல்வர் ராகேஷ்குமார் மிஸ்ரா, தலைமையாசிரியை ராதா வெங்கடேஷன் ஆகியோர் சிறப்பு விருந்தினரை வரவேற்று கவுரவித்தனர். உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகர் மற்றும் குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

