/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல விளையாட்டு போட்டிகள்; பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் 'சாம்பியன்'
/
மண்டல விளையாட்டு போட்டிகள்; பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் 'சாம்பியன்'
மண்டல விளையாட்டு போட்டிகள்; பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் 'சாம்பியன்'
மண்டல விளையாட்டு போட்டிகள்; பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் 'சாம்பியன்'
ADDED : மார் 31, 2025 10:25 PM

கோவை; கோவை மண்டல அளவில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றுள்ளது.
பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில், மாநில அளவில் பதக்கங்கள் குவித்த, 21 விளையாட்டு வீரர்கள், பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
2024-25ம் கல்வியாண்டில், கோவை மண்டல அளவில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி ஆண்கள் பிரிவில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றுள்ளது.
இக்கல்லுாரி, பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் போட்டியில் முதலிடமும், செஸ் போட்டியில் இரண்டாம் இடமும், கூடைப்பந்து, ஹேண்ட்பால் போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரர் தனுஷ்ராஜூக்கு, தனிநபர் சாம்பியன்ஷிப்(டிராக் மென்) பட்டமும், குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வீரர் கவுசிக் தனிநபர் சாம்பியன்ஷிப்(பீல்டு மென்) பட்டமும் வழங்கப்பட்டது.
குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெண்கலம், 100 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்ற வீரர் ஜோதிராஜ் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டமும்(டிராக் மென் மற்றும் பீல்டு மென்), பெண்கள் பிரிவில், 100 மீ., ஓட்டத்தில் தங்கம், 200 மீ., ஓட்டத்தில் வெள்ளியும் வென்ற தன்யாவிற்கு, தனிநபர் சாம்பியன்ஷிப் (டிராக் விமென்) பட்டமும் அளிக்கப்பட்டது.
குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் தங்கம் வென்ற மோனிஷாவிற்கு தனிநபர் சாம்பியன்ஷிப் (பீல்டு விமென்) பட்டமும், நீளம் தாண்டுதலில் தங்கம், 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற பிருந்தா திவ்யதர்ஷினிக்கு தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டமும்(டிராக் விமென் மற்றும் பீல்டு விமென்) வழங்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் கிரிராஜ், வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

