/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் எல்.ஐ.சி., ஊழியர் சங்க வைர விழா
/
சிதம்பரத்தில் எல்.ஐ.சி., ஊழியர் சங்க வைர விழா
ADDED : ஜூலை 13, 2011 01:40 AM
சிதம்பரம் : சிதம்பரம் அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்க வைர விழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
சுஜாதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஜூன் மாதம் நடந்த வணிகத்தில் முன்னிலையில் வந்த முகவர்கள் ராஜேந்திரன், செல்வராசு, குருமூர்த்தி, அன்பரசி, மனோரமா ஆகியோர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மூத்த முகவர்கள் சுந்தரராமன், பாலாம்பாள் ஜெயராமன் கவுரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக வேலூர் கோட்ட இணைச் செயலர் வெங்கடேசன், முது நிலை கிளை மேலாளர் முருகன், வளர்ச்சி அலுவலர்களின் சங்க செயலர் பார்த்தசாரதி, முகவர் சங்கத் தலைவர் சம்பந்தமூர்த்தி, கனகராஜ், அமிர்தகணேசன், சிதம்பரம் வட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.