/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செம்மை நெல் வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு
/
செம்மை நெல் வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : ஜூலை 13, 2011 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : வாழக்கொல்லை கிராமத்தில் செம்மை நெல் நடவை வேளாண் உதவி
இயக்குனர் ஆய்வு செய்தார்.
சேத்தியாத்தோப்பை அடுத்த வாழைக்கொல்லை
கிராமத்தில் 125 ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. அதில் 50
ஏக்கர் நிலத்தில் செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலங்களை கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் ஆய்வு
செய்தார். பின்னர் செந்தில்ராயர் என்பவரது வயலில் கோனா வீடர் கருவி மூலம்
களை எடுக்கும் முறை மற்றும் மேலுரம் இடும் முறையை செயல் விளக்கம் செய்து
காண்பித்தார். அவருடன் துணை வேளாண் அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.