/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலைக்குச் சென்ற வாலிபர் மர்ம சாவு
/
வேலைக்குச் சென்ற வாலிபர் மர்ம சாவு
ADDED : ஜூலை 13, 2011 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: வேலைக்குச் சென்றவர் மர்மமான முறையில் சாலையோரத்தில் இறந்து கிடந்தார்.குள்ளஞ்சாவடி அடுத்த அயன் நகரத்தைச் சேர்ந்தவர் பூராசாமி மகன் ராமலிங்கம், 37.
இவர் நேற்று முன்தினம் காலை தனது மனைவியிடம் வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றார். இந்நிலையில் மாலை 5 மணிக்கு கடலூர் - புதுச்சேரி சாலையில் உச்சிமேடு விநாயகர் கோவில் அருகே இறந்து கிடந்தார். அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் நாக்கு வறண்டு இறந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து அவரது மைத்துனர் மேல் பூவானிக்குப்பத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

