/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு போலீசார் அகற்றினர்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு போலீசார் அகற்றினர்
ADDED : ஜூலை 13, 2011 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீசாரால் அகற்றப்பட்டது.
சிதம்பரம் நகரில் பிரதான நான்கு வீதியில் பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதைகளை வியாபாரிகள் கொட்டகை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை நேற்று இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கண்ணபிரான் தலைமையில் போலீசார் அகற்றினர். போலீஸ் வருவதை கண்ட வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால் சம்பிரதாய ஆக்கிரமிப்பு அகற்றும் பணியாக இல்லாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுத்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.