sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குவாரிக்கு அனைத்து பாங்க்குகளிலும் "டிடி' எடுக்க அனுமதிக்க கோரிக்கை

/

குவாரிக்கு அனைத்து பாங்க்குகளிலும் "டிடி' எடுக்க அனுமதிக்க கோரிக்கை

குவாரிக்கு அனைத்து பாங்க்குகளிலும் "டிடி' எடுக்க அனுமதிக்க கோரிக்கை

குவாரிக்கு அனைத்து பாங்க்குகளிலும் "டிடி' எடுக்க அனுமதிக்க கோரிக்கை


ADDED : ஜூலை 13, 2011 11:49 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்: அரசு குவாரியில் மணல் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கான வரைவோலைகளை (டிடி) அனைத்து வங்கிகளிலும் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு குவாரியில் மணல் எடுப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் ஸ்டேட் பாங்க் மூலம் மட்டுமே வரைவோலையாக (டிடி) பெறப்படுகிறது.மங்களூர், சிறுபாக்கம், ராமநத்தம் உட்பட பல கிராமங்களில் அதிகளவில் அரசு மற்றும் தனியார் கட்டட கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இப்பகுதியில் இந்தியன் பாங்க், பல்லவன் பாங்க், கனரா பாங்க், ஸ்டேட் பாங்க்குகள் உள்ளன.ஆனால் குவாரிகளில் மணல் பெறுவதற்கு ஸ்டேட் பாங்க் வரைவோலை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க்குக்கு மட்டுமே அனுமதித்துள்ளதால் தினமும் வரைவோலை பெற ஏராளமானோர் பாங்க்கில் குவிகின்றனர்.இதனால் உடனடியாக வரைவோலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே பிற பாங்க்குகளிலும் வரைவோலைகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.










      Dinamalar
      Follow us