/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
--மாஜி அமைச்சர் சம்பத் தலைமையில் பண்ருட்டி 22வது வார்டில் ஓட்டு சேகரிப்பு

ADDED : ஏப் 16, 2024 05:43 AM

பண்ருட்டி, : பண்ருட்டி நகராட்சி வார்டு 22ல் அ.தி.மு.க., கூட்டணியின் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் முரசு சின்னத்தில் தீவிர ஒட்டு சேகரித்தனர்.
நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., பண்ருட்டி நகர துணை செயலாளரும், கவுன்சிலருமான மோகன் முன்னிலை வகித்தார். பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கான எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. மாறாக அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தியது.
ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், அம்மா உணவகம், அம்மா கிளினிக் உள்ளிட்டவை நிறுத்தியது.
தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் போதை கலாசாரம் பெருகி வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சொத்துவரி, தொழில்வரி, பதிவு வரி என பல மடங்கு வரிகளை தி.மு.க., போட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் அவதியடைகின்றனர். இதற்கு அ.தி.மு.க., கூட்டணி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.