/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மார்க்கெட்டில் அடிப்படை வசதியில்லை வாடகை செலுத்த வியாபாரிகள் மறுப்பு

ADDED : நவ 01, 2025 02:12 AM
நெல்லிக்குப்பம்: மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே வாடகை செலுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட் செயல் படுகிறது.
இங்கு 20க்கும் மேற்பட்ட இறைச்சி, காய்கறி கடைகள் உள்ளன. அதன் அருகிலேயே ஆடு அறுக்கும் தொட்டி உள்ளது.
இந்த கடைகளுக்கு தண்ணீர் வழங்கும் மோட்டார் பழுதானதால் கடந்த 20 நாட்களாக தண்ணீர் சப்ளை இன்றி வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் சேர்ந்துள்ள கோழி, ஆடுகளின் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த கழிவுகளில் புழுக்கள் உறுவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கடைக்கு வரும் மக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மார்க்கெட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே வாடகை செலுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.