/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விரிவுரையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி
/
விரிவுரையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி
ADDED : ஜூலை 13, 2011 11:44 PM
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி முகாம் நடந்தது.கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார்.கோயமுத்தூரைச் சேர்ந்த பேராசிரியர் பாஸ்கர், மாணவர்களை உளவியல் முறையில் கையாளுதல், ஆசிரியர்கள் தங்களை சரியான முறையில் ஆயத்தப்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கற்றலின் நோக்கம் அமைதல் குறித்து பயிற்சியளித்தார்.
பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் செய்திருந்தார். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் ராஜபிரதாபன் நன்றி கூறினார்.

