ADDED : மே 03, 2024 11:56 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் 1989 - 92ம் ஆண்டில் வணிகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர் டாக்டர் தமிழ்மணி தலைமை தாங்கினார். விருத்தகிரி வரவேற்றார். விழாவில், அப்போதைய பேராசிரியர்கள் சுந்தரராஜன், நடராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி, முன்னாள் மாணவர்கள் அனைவரும், காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் தங்களின் கல்லுாரி கால நினைவுகள், தற்போதைய வேலை, குடும்பம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் மணிமாறன், சேட், வீரசேகரன், விஜயலட்சுமி, புருேஷாத்தமன், சையத் நகீப், ஹரி, சுப்ரமணியன் உட்பட 32 பேர் பங்கேற்றனர்.