தே.மு.தி.க.,'மாஜி' எம்.எல்.ஏ., வீடு, அலுவலகத்தில் சோதனை
தே.மு.தி.க.,'மாஜி' எம்.எல்.ஏ., வீடு, அலுவலகத்தில் சோதனை
ADDED : ஆக 14, 2026 11:31 PM
விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த, ஊ.கொளப்பாக்கத்தை சேர்ந்த முத்துகுமார், 2011ல் விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
அதன்பின், தி.மு.க.,வில் இணைந்த முத்துக்குமார், அவரது கல்லுாரி நண்பரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஷுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ்நாடு பெற்றோர் - ஆசிரியர் கழகத்துணை தலைவராக இருந்தார்.
அப்போது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது உட்பட பல்வேறு புகார்களில் முத்துகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், தலைமறைவாக உள்ள முத்துகுமாரை தனிப்படை போலீசார் தேடினர்.
இந்நிலையில், விருத்தாசலத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில், நேற்று முன்தினம் மதியம், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் செந்தில் தலைமையிலான, 10 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
