/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
/
தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
ADDED : மே 30, 2024 11:03 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 20 ஆண்டுகள் வேதியியல் ஆசிரியராகவும்,அதே பள்ளியில் 6 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணி செய்து பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகனுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு புலவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெகத்ரட்சகன் எழுதிய வெயிலில் மழை என்ற நுாலை வெளியிட்டார். என்.எஸ்.எஸ்.,தொடர்பு அலுவலர் திருமுகம் விழாவில் கலந்து கொண்டு தலைமை ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி பாராட்டினர்.
விழாவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் செந்தில்குமார்,தரணிதரன் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.