/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்மோட்டார் பழுது; குடிநீரின்றி மக்கள் அவதி
/
மின்மோட்டார் பழுது; குடிநீரின்றி மக்கள் அவதி
ADDED : மார் 04, 2025 06:53 AM
சேத்தியாத்தோப்பு; காவலக்குடி ஊராட்சி காலனித் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மின் மோட்டார் பழுதால் குடிநீருக்காக பொதுமக்கள் நீண்ட துாரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவலக்குடி ஊராட்சி காலனி தெருவில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் போர்வெல் மின்மோட்டார் கடந்த வாரம் பழுதானது. ஊராட்சி நிர்வாகம் மோட்டாரை போர்வெல்லில் இருந்து எடுத்து, பழுது பார்க்க அனுப்பி வைத்துள்ளனர்.
மோட்டார் பழுதால் அப்பகுதி பெண்கள் வயல்வெளி மோட்டார்களுக்கு சென்று குடிதண்ணீர பிடித்து கொண்டு வருகின்றனர். வெயில் காலம் துவங்கியுள்ள நிலையில், குடிநீருக்காக பொதுமக்கள் நீண்ட துாரம் செல்வது சிரமத்தை ஏற்படுத்துகிறது. மின் மோட்டார் விரைவில் பழுதுநீக்கி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.