ADDED : பிப் 09, 2025 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பூங்குணம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார்,58; இவர் புதுப்பேட்டை உதவி மின்பொறியாளர் அலுவலகத்தின் மின்வாரிய ஊழியர்.
இவர் நேற்று மதியம் 3:00 மணியளவில் பணப்பாக்கம் முந்திரிக்கொட்டை கம்பெனி எதிரில் உள்ள மின் மாற்றியில் வேலை செய்ய மின்சாரத்தை துண்டித்துவிட்டு மின்மாற்றியில் பியூஸ் போட ஏறினார்.
அப்போது ஏற்கனவே உயர்மின்இணைப்பில் இருந்து மின் மாற்றிக்கு நேரடி இணைப்பு செய்திருந்ததில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சுகுமார் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

