/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சட்டசபை பேரவை குழுவினர் கடலுாரில் திட்டப்பணிகள் ஆய்வு
/
சட்டசபை பேரவை குழுவினர் கடலுாரில் திட்டப்பணிகள் ஆய்வு
சட்டசபை பேரவை குழுவினர் கடலுாரில் திட்டப்பணிகள் ஆய்வு
சட்டசபை பேரவை குழுவினர் கடலுாரில் திட்டப்பணிகள் ஆய்வு
ADDED : மார் 06, 2025 01:51 AM

கடலுார்: தமிழக சட்டசபை பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர், கடலுார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த ஆய்வு கூட்டத்தில், சட்டசபை பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன் (கும்பகோணம்), கிரி (செங்கம்), துரைசந்திரசேகரன் (பொன்னேரி), சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்) மற்றும் விஷ்ணுபிரசாத் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நுகர்வோர் வாணிபக்கழகம், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தொழில் முன்னேற்ற நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
கூட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாநகராட்சி கமிஷனர் அனு , கூடுதல் கலெக்டர் சரண்யா, ஆர்.டி.ஓ., அபிநயா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.