/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடத்தை விதி முறையால் 'தண்ணீர் பந்தல் மிஸ்சிங்'
/
நடத்தை விதி முறையால் 'தண்ணீர் பந்தல் மிஸ்சிங்'
ADDED : ஏப் 05, 2024 11:51 PM
புவனகிரி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றப்படுவுதால் வழக்கமாக அரசியல் கட்சியினர் பொது இடங்களில் வைத்து பொதுமக்களின் கோடை தாகத்தை தீர்ப்பது தடைப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோடை காலம் துவங்கியதும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் நீர்மோர், தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம் புவனகிரி எம்.ஜி.ஆர் சிலை அருகில் அ.தி.மு.க.,வினர் பந்தல் அமைத்து முதல்நாள் இளநீர், தர்பூசனி உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் வழங்குவர். மேலும் கீற்று பந்தல் அமைத்து தண்ணீர் பந்தல் திறந்து மோரும் வழங்கி வந்தனர்.
இதனால் புவனகிரியில் பஸ்சிற்காக காத்திருப்பவர்கள் பயன்பெற்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் பாட்டிலில் பிடித்து செல்வர். இதனால் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை இயங்கி வந்த தண்ணீர் பந்தல் தேர்தல் நடத்தை விதி முறைகளால் தடை பட்டுள்ளது.

