நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்,- அரசக்குழி பகுதியை சேர்ந்தவர் சிரில்ரூபன், 28.
இவர் என்.எல்.சி.,யில் காண்டிராக்ட் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த. அவர் நீண்ட நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிேலயே இருந்து உள்ளார். வேலைக்கு செல்லாமால் வீட்டில் இருந்த சிரில்ரூபனை அவரது தந்தை கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.